1. க்ருஷ்ண த்வைபாயனர் - வியாஸ மகரிஷி. விஷ்ணுவும் வியாஸரும் ஒருவரே என்று போற்றப்படுபவர். படகோட்டிய பரதகுல சத்யவதிக்கும் பராசர முனிவருக்கும் தீவு போன்ற இடத்தில் (த்வைபாயனம்) பிறந்தவர். வேதங்களை ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் என்று பிரித்தவர். வேதவியாஸர் என்று வணங்கப்படுபவர். தனது ஜெயா என்ற மஹாபாரதத்தை விநாயகர் கொம்பை ஒடித்து மஹாபாரதமாக எழுதும் பாக்கியம் பெற்றவர். திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ஆகியோரின் பிறப்புக்கு நியோக முறையில் உதவியவர்.
2. ரோமஹர்ஷனர் - புராணங்களை உபன்யாசம் செய்யும்போது கேட்பவர்கள் மயிற்கூச்சல் ஏற்படும்படி செய்பவர். - ஆதிபர்வம் - அனுக்கிரமணிகா பர்வம்
3. உக்ரஸ்ரவஸ் - ரோமஹர்ஷனரின் புத்திரர். பௌராணிகர். ஸுத குலத்தவர். (பிராம்மண ஸ்த்ரீக்கும் க்ஷத்ரியனுக்கும் பிறந்தவர்கள் ஸுதர்கள்) . நைமிசாரண்யத்தில் ஸத்ரயாகம் செய்துவந்த சௌனகாதி முனிவர்களுக்கு மஹாபாரத உபன்யாசம் செய்தவர். - ஆதிபர்வம் - அனுக்கிரமணிகா பர்வம்
4. ஜனமேஜயன் - பரீக்ஷித்து சக்கரவர்த்தியின் புத்திரர், ஸர்ப்ப யாகம் செய்தவர் - ஆதிபர்வம் - அனுக்கிரமணிகா பர்வம்
5. சௌனகர் - குலபதி. பதினாயிரம் ரிஷிகளுக்கு அன்னபானம் கொடுத்து யாகம் வளர்க்க காப்பாற்றுபவர் - ஆதிபர்வம் - அனுக்கிரமணிகா பர்வம்
6. ஸரமை - தேவலோகத்து நாய். குருக்ஷேத்திரத்தில் ஜனமேஜயன் நடத்திய ஸத்திரயாகத்தில் தன் மகன் ஸாரமேயனை அடித்ததற்காக நீதி கேட்டு சாபம் கொடுத்தது. - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
7. ஸாரமேயன் - ஸரமையின் பிள்ளை. - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
8. ஸ்ருதஸேனன் - ஜனமேஜயனின் சகோதரன். ஜனமேஜயனுடன் ஸத்ரயாகம் செய்தவன். - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
9. உக்ரஸேனன் - ஜனமேஜயனின் சகோதரன். ஜனமேஜயனுடன் ஸத்ரயாகம் செய்தவன். - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
10. பீமஸேனன் - ஜனமேஜயனின் சகோதரன். ஜனமேஜயனுடன் ஸத்ரயாகம் செய்தவன். - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
11. ஸ்ருதஸ்ரவஸ் - ஜனமேஜயனின் ராஜ்ஜியத்தில் இருந்த ஒரு ரிஷி. இவரது புத்திரர் ஸோமஸ்ரவஸை ஜனமேஜயன் தனது புரோகிரதராக நியமித்துக்கொண்டான். - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
12. ஸோமஸ்ரவஸ் - ஸ்ருதஸ்ரவஸ் என்ற ரிஷியின் புத்திரர். அந்த ரிஷியின் ரேதஸைக் குடித்த பெண் நாகத்துக்குப் பிறந்தவர். பிராம்மணர்கள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவர். - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
13. அயோத தௌம்யர் - இரும்பு போன்ற பற்களையுடைய ரிஷி. உத்தாலக் ஆருணி, உபமன்யு, பைதர் (வேதா) போன்ற பிரதான சிஷ்யர்களின் குரு. - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
14. உத்தால ஆருணி - தௌம்யரின் சிஷ்யர். குரு கட்டளைக்காக கழனி மடையை அடைக்க அதன் குறுக்காகப் படுத்தவர். அவரின் அழைப்புக்கு மடையைப் பிளந்துகொண்டு (உத்தாலகன் - பிளக்கின்றவன்) எழுந்ததால் உத்தாலக ஆருணி. - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
15. உபமன்யு - தௌம்யரின் சிஷ்யர். பசுக்களை மேய்த்தவன். குருவின் கட்டளைக்கிணங்கி சாப்பிடாமல் இருந்து கடைசியில் எருக்கம் இலைகளைத் தின்று கண் பார்வையை பறிகொடுத்தவர். அஸ்வினீ தேவர்களைத் துதித்து கண் பார்வையை மீண்டும் பெற்றவர். அஸ்வினீ தேவர்களின் ஆசியால் பொன்னிற பற்களைப் பெறும் பாக்கியம் பெற்றவர். - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
16. பைதர் - தௌம்யரின் சிஷ்யர். உதங்கரிஷியின் குரு. - ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
17. பௌஷ்யன் - பைதரை புரோகிதராக வரித்தவன். க்ஷத்ரிய ராஜா. ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
18. உதங்கர் - பைதரின் சிஷ்யர். குரு தக்ஷிணையாக குருபத்னிக்கு பௌஷ்யராஜா மனைவியின் குண்டலங்களை யாசித்துப் பெற்றவர். அந்தக் குண்டலங்களை அபகரித்துச் சென்ற தக்ஷகனை நாகலோகம் வரை துரத்திச் சென்று மீட்டவர். ஜனமேஜயனை ஸர்ப்பயாகம் செய்யத் தூண்டியவர். ஆதிபர்வம் - பௌஷ்யபர்வம்
....பட்டியல் வளரும்.....
No comments:
Post a Comment